Wednesday 18 March 2015

தங்க நிறத்தில் ஒளிரும் நந்தி பகவான்!


ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில், நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்.

Tuesday 9 December 2014

பெருமாள், லட்சுமி, சிவன் மூலவரும் ஒரே சந்நிதியில் காட்சி தரும் கோவில்!


பொய் சொன்னால் மனிதனுக்கு என்னாகும்  என்பதை உணர்த்தும் வகையில் திருமால் ஒரு லீலையை  நிகழ்த்த விரும்பினார். ஒருசமயம், கைலாயத்தில் ஒருமுறை சிவனும், பார்வதியும் பகடை விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு வந்தார். விளையாட்டுக்கு நடுவராக இருந்து வெற்றி பெற்றது யார் என்று சொல்லும் பொறுப்பை ஏற்றார். விளøயாட்டில் பார்வதி வென்றாள். ஆனால், போட்டியில் சிவன் வென்றதாகக் கூறிவிட்டார். தன் சகோதரரே இப்படி சொல்லிவிட்டாரே என வருத்தமடைந்தாள் பார்வதி.  கடவுளாகவே இருந்தாலும் பொய் பேசினால், அவர் அதற்குரிய தண்டனையை அடைந்து தீர வேண்டும்  என்பதன் அடிப்படையில், தவறான தீர்ப்பு வழங்கிய திருமால், பிளவுபட்ட நாக்குடன் பாம்பாக மாறும்படி சபித்தாள். சாபவிமோசனமாக,பூலோகத்தில் முக்தி தலமாக விளங்கும் காஞ்சிபுரம் சென்று சிவனைப் பூஜித்தால் சாபம் நீங்கும். பிளவுபட்ட நாக்கு ஒன்றாகி பாம்பு வடிவம் மறையும், என்றாள்.  அதன்படி, திருமாலும் காஞ்சிபுரத்தில் சிவனை வழிபட்டு  சாப விமோசனம் பெற்றார். அவரே, அனந்தபத்மநாபர்  என்னும் திருநாமத்துடன் சயனகோலத்தில் லட்சுமி தாயாருடன் அருள்பாலிக்கிறார். சிவன் லிங்கவடிவில் மகாகாளேஸ்வரர் என்ற  திருநாமத்துடன் விளங்குகிறார். மூவரும் ஒரே சந்நிதியில் காட்சி தருவது சிறப்பு.  விநாயகரும், முருகனும்  சந்நிதியின் இருபுறமும் வீற்றிருக்கின்றனர். காஞ்சிபுரத்திலுள்ள நவக்கிரக தலங்களில் இது  கேதுவுக்குரியதாக திகழ்கிறது. பூமியில் புதையுண்டு கிடந்த இக்கோயிலைப் பல ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப்பெரியவர் புதுப்பித்து திருப்பணி செய்தார். பலமுறை அவர் வழிபட்டதோடு, பக்தர் களுக்கு ஆசியும்  அளித்துள்ளார். காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோயில் செயல்படுகிறது. இது பாம்பு தொடர்புடைய கோயில் என்பதால், தோல், வாய்,நாக்கு, தொடர்பான நோயுள்ளவர்கள், அடிக்கடி தொண்டையில் வலி வந்து  பேச சிரமப்படுகிறவர்கள் நோய் நீங்க அனந்த பத்மநாபரை வேண்டலாம்.

Wednesday 26 November 2014

நெய்யை ஈ, எறும்பு மொய்க்காத நந்தீஸ்வரர் கோவில்!


வேந்தன்பட்டி கிராமத்தில் (புதுக்கோட்டை) உரையும் நெய் நந்தீஸ்வரர் கோவிலில் ஆச்சரியப் படும் விஷயம் என்னவென்றால், இந்த கோவிலில் உள்ள நந்திக்கு நெய் அபிஷேகம் செய்யப்படும். ஒரு எறும்போ, ஈயோ வந்து மொய்த்து அந்த நெய்யை தீண்டுவதில்லை. நந்தியம்பெருமான் தலையில் ஒரு சக்கரம் உள்ளது, அதுவே இதற்கு காரணம் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகிற நெய்யானது, கோவிலுக்குள் இருக்கும் கிணற்றில் சேகரிக்கப்படுகிறது. அங்கும் ஒரு பூச்சியும் மொய்ப்பதில்லை.  

Friday 1 August 2014

லிங்கத்தின் ஆவுடையில் நிற்கும் கோலத்தில் பெருமாள்!


சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். வேலூர் மாவட்டத்தில் திருப்பாற்கடல் என்கிற ஊரில் , பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்கிற நாமத்துடன் பெருமாள் அருள் பாலிக்கிறார்.

Saturday 1 June 2013

ஈர மணல் காய்ந்து விபூதியாகும்!

சுருளி மலை வேலப்பர் கோயில், தேனீ. இத்தலத்தில் முருகன் குகைக்கோயிலில் அருள்பாலிக்கிறார். விபூதிக் குகையில் உள்ள ஈர மணல் காய்ந்த பின் விபூதியாக மாறுவது, இங்குள்ள மரம் ஒன்று தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக காட்சியளிப்பது, 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை, தழைகள் பாறை போல மாறுவது, பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசம் வழுக்குத்தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது.